Monday 29 October 2018

துன் மகாதீர் பதவி விலகினால் பக்காத்தான் கூட்டணி சிதறக்கூடும்- டான்ஶ்ரீ விக்னேஸ்வரன்

ரா.தங்கமணி

கோலாலம்பூர்-
பிரதமர் பதவியிலிருந்து துன் டாக்டர் மகாதீர் முகம்மது விலகும்போதும் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி சிதறக்கூடும் என்று மஇகா தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் கருத்து தெரிவித்தார்.

பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி இன்று ஆட்சி அமைத்திருப்பதற்கு துன் மகாதீரே காரணம். முன்பு  எதிர்க்கட்சியாக திகழ்ந்த அவர்களால் ஆட்சியை கைப்பற்ற முடியவில்லை. மகாதீரின் வருகையாலே பக்காத்தான் கூட்டணி ஆட்சி அமைக்க முடிந்தது.

துன் மகாதீர் பிரதமர் பதவியிலிருந்து விலகும்போது நிச்சயம் அக்கூட்டணி சிதறக்கூடும். கெ அடிலான் கட்சியினருடன் இணைந்து ஜசெக செயல்பட முடியாது. நிச்சயம் அக்கூட்டணி பிரியக்கூடும் என்று நேற்று நடைபெற்ற மஇகாவின் 72ஆவது பொதுப் பேரவைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது டான்ஶ்ரீ விக்னேஸ்வரன் இவ்வாறு கூறினார்.

No comments:

Post a Comment