Thursday 25 October 2018

மஇகா தேர்தல்; வீண் ஆருடங்களும் விமர்சனங்களும் வேண்டாம் - டான்ஶ்ரீ விக்னேஸ்வரன்

ரா.தங்கமணி

கோலாலம்பூர்-
அண்மையில் நடந்து முடிந்த மஇகா தேர்தல் தொடர்பான ஆருடங்களையும் விமர்சனங்களையும் பரப்ப வேண்டாம் என்று அக்கட்சியின் தேசியத் தலைவர்  டான்ஶ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

மஇகா தேர்தலில் ஏற்பட்ட குளறுபடிகள் தொடர்பான 9 புகார்களை பெற்றிருக்கிறோம். அதில் 3 புகார்கள் துணைத் தலைவர் வேட்பாளர் டான்ஶ்ரீ எம்.ராமசாமி உடையது.

இந்த 9 புகார்கள் குறித்தும் தேர்தல் குழு விசாரணை மேற்கொண்டு வருகிறது. விசாரணையின் முடிவு தெரிய வரும் வரை கட்சி உறுப்பினர்கள் பொறுமை காக்க வேண்டும்.

வீண் ஆருடங்களையும் விமர்சனங்களையும் பரப்பாமல் கட்சியின்
நலனை கருத்தில் கொண்டு அனைவரும் பொறுமையாக இருக்க வேண்டும்.
வீணான விமர்சனங்களை பரப்பி கட்சியின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்த வேண்டாம் எனவும் தேர்தல் முடிவில் அதிருப்தி அடைந்துள்ளவர்கள் கட்சியிலிருந்து வெளியேறாமல் கட்சியை இன்னும்  வலுபடுத்தும் நடவடிக்கைக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் எனவும் நேற்று நடைபெற்ற மத்திய செயலவைக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் டான்ஶ்ரீ விக்னேஸ்வரன் இவ்வாறு கூறினார்.

No comments:

Post a Comment