Thursday 4 October 2018

முதலமைச்சரானால் நடிக்க மாட்டேன்- நடிகர் விஜய்


சென்னை-

விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் சர்கார் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய விஜய், மெர்சல் படத்தில் கொஞ்சம் அரசியல் இருந்தது, ஆனால் சர்கார் படத்தில் அரசியல்ல மெர்சல் பண்ணியிருக்கிறோம்.

வெற்றிக்காக எவ்வளவு வேண்டுமானாலும் உழைக்கலாம். ஆனால் வெற்றியடைந்து விடக்கூடாது என்பதற்காக ஒருகூட்டம் உழைத்துக் கொண்டிருக்கிறது. எனக்கு மட்டும் இல்லை, உங்கள் அனைவரது வாழ்க்கையிலும் இருப்பது தான், அது இயற்கையானது தான். அதை ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் ஒன்று, வாழ்க்கை என்னும் விளையாட்டை பார்த்து விளையாடுங்கள் நண்பா.

தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று சர்காரை அமைப்பார்கள். ஆனால் நாங்கள் சர்காரை அமைத்துவிட்டு தேர்தலில் நிற்கப் போகிறோம். படத்தை சொன்னேன், பிடித்திருந்தால் படத்திற்கு ஓட்டு போடுங்கள்.

சர்கார் படத்தில் நான் முதலமைச்சராக நடிக்கவில்லை. நிஜத்தில் முதலமைச்சரானால், முதலமைச்சராக நடிக்க மாட்டேன். உண்மையாக இருப்பேன்.

நான் முதலமைச்சரானால் லஞ்சம், ஊழலை ஒழிப்பேன். ஆனால் அதை ஒழிப்பது என்பது எளிதான விஷயமாக எனக்கு தெரியவில்லை. நாம் அன்றாட வாழ்வில் நாம் பழகிபோய் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எந்த அளவுக்கு ஒழிக்க முடியும் என்று தெரியவில்லை. வேறு வழியில்லை ஒழித்து தான் ஆக வேண்டும் என்று குட்டிக்கதை ஒன்றையும் கூறினார்.

ஒரு மாநிலத்தில் மேல்மட்டத்தில் இருப்பவர்கள் சரியாக இருந்தால், மற்றவர்களுக்கெல்லாம் ஒரு பயம் வரும். ஒரு தலைவன் சரியாக நடந்தால், அவன் வழியில் அவன் கட்சியும் நல்ல கட்சியாக இருக்கும். ஆனால் ஒன்று, தர்மம் தான் ஜெயிக்கும், நியாயம் தான் ஜெயிக்கும், ஆனால் கொஞ்சம் லேட்டா ஜெயிக்கும்.  இவ்வாறு விஜய் பேசினார்.

சர்கார் படம் தீபாவளியை முன்னிட்டு ரிலீசாக இருக்கிறது.

No comments:

Post a Comment