Friday 12 October 2018

வருங்கால பிரதமரை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு போர்ட்டிக்சன் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது- கணபதிராவ்


ரா.தங்கமணி

போர்ட்டிக்சன் -
வரும் 13ஆம் தேதி நடைபெறவுள்ள போர்ட்டிக்சன் இடைத்தேர்தலில் வருங்கால பிரதமரை இத்தொகுதி மக்கள் இழந்து விடக்கூடாது என சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் வலியுறுத்தினார்.

ஏழு முனைப் போட்டியை ஏற்படுத்தியுள்ள இத்தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளராக களமிறங்கியுள்ள டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு போர்ட்டிக்சன் வாக்காளர்கள் பெரும் ஆதரவு வழங்க வேண்டும்.

போர்ட்டிக்சன் நாடாளுமன்றத் தொகுதி வருங்கால பிரதமரின் தொகுதியாக உருமாற இந்த ஆதரவு பெரிதும் தேவைபடுகிறது. பிரதமரின் தொகுதி என்ற நிலையில் இங்கு அபரிமிதமான வளர்ச்சி ஏற்படும்.

இதனால் இங்குள்ள மக்களின் வாழ்வாதாரமும் பொருளாதாரமும் மேம்பாடு காணப்படுவதோடு நாட்டின் அதி முக்கிய தொகுதி இது மாறக்கூடும்.
வருங்கால பிரதமரை தெரிவு செய்யக்கூடிய ஓர் உன்னத வாய்ப்பு போர்ட்டிக்சன் மக்களுக்கு கிடைத்துள்ளது. அதனை இம்மக்கள் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று இங்கு நடைபெற்ற பிரச்சாரம் கூட்டத்தில் உரையாற்றியபோது மலேசியர் இந்தியர் குரல் இயக்கத்தின் ஆலோசகருமான கணபதிராவ் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment