கோலாலம்பூர்-
பிகேஆர் கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டார்.
போர்ட்டிக்சன் இடைத்தேர்தலில் பெரும்பான்மையில் வெற்றி பெற்ற டத்தோஶ்ரீ அன்வார், இன்றுக் காலை மக்களவை சபாநாயாகர் முகமட் அரிஃப் முகமட் யூசோப் முன்னிலையில் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றார்.
நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் சிறையிலிருந்து வெளியேறி அரச மன்னிப்பு பெற்ற டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் நாடாளுமன்றத்தில் நுழைவதற்கு ஏதுவாக போர்ட்டிக்சன் இடைத் தேர்தல் நடத்தப்பட்டது.
No comments:
Post a Comment