Thursday 28 June 2018
மஇகாவின் தேசியத் தலைவராக டான்ஶ்ரீ விக்னேஸ்வரன் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்- மணிமாறன் வலியுறுத்து
ரா.தங்கமணி
சுங்கை சிப்புட்-
மஇகாவின் கட்சித் தேர்தலில் டான்ஶ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தேசியத் தலைவர் பதவிக்கு ஏகமனதாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என சுங்கை சிப்புட் மஇகா செயலாளர் கி.மணிமாறன் வலியுறுத்தினார்.
வரும் ஜூலை மாதம் நடைபெறவுள்ள கட்சி தேசியத் தலைவர் தேர்தலில் போட்டியிடவிருக்கும் மேலவை சபாநாயகர் டான்ஶ்ரீ விக்னேஸ்வரனுக்கு தேசியத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.
அதேபோன்று தாப்பா நாடாமன்ற உறுப்பினர் டத்தோஶ்ரீ எம்.சரவணன் கட்சியின் தேசிய துணைத் தலைவராகவும் மேலவை உறுப்பினர் டத்தோ டி.மோகன், கேமரன் மலை நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ சி.சிவராஜ் ஆகியோர் கட்சியின் உதவித் தலைவர்களாக ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் எனவும் மணிமாறன் குறிப்பிட்டார்.
நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலில் அடைந்த பின்னடைவை சரி செய்து கட்சியை மீண்டும் வலுவானதாக உருவாக்கவும் இளைஞர்களின் ஆதரவை பெருமளவு பெறவும் இந்த ஆக்ககரமான ஆலோசனை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் எனவும் மணிமாறன் குறிப்பிட்டார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment