Thursday 7 June 2018

கேமரன் மலை; டத்தோ சிவராஜின் வெற்றியை எதிர்த்து மனோகரன் வழக்கு

கோலாலம்பூர்-
கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி பெற்ற  தேசிய முன்னணி  வேட்பாளரின் வெற்றியை எதிர்த்து ஜசெக  வேட்பாளர் எம்.மனோகரன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

நடந்து முடிந்த 14ஆவது பொதுத் தேர்தலில் இத்தொகுதியில் தேமு சார்பில் போட்டியிட்ட டத்தோ சி.சிவராஜ், பூர்வக்குடியினருக்கு லஞ்சம் வழங்கியதால் 1954 தேர்தல் சட்டவிதிகளின்படி இத்தேர்தல் முடிவை ரத்து செய்யுமாறு வழக்கு தொடரப்பட்டுள்ளதாக மனோகரன் குறிப்பிட்டார்.

ஜெலாய் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட டத்தோஶ்ரீ வான் ரோஸ்டி வான் இஸ்மாயிலுடன் இணைந்து சிவராஜ் இக்குற்றத்தை புரிந்துள்ளார்.

பூர்வக்குடியினரின் வாக்குகளை பெறுவதற்காக சில 'Tok Batin' தரப்பினருக்கு 30 வெள்ளி முதல் 1,00 வெள்ளி வரையில் லஞ்சம் வழங்கப்பட்டுள்ளது என தனது புகாரின் மனோகரன் குறிப்பிட்டுள்ளார்.

ஐந்து முனை தேர்தலை உட்பட்டுத்தியிருந்த கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியில் 10,307 வாக்குகளை பெற்று மஇகா இளைஞர் பிரிவுத் தலைவருமான டத்தோ சிவராஜ் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment