ரா.தங்கமணி
கோலாலம்பூர்-
மைபிபிபி கட்சியின் முதல் கடமையே கட்சியை சீரமைப்பு செய்வதுதான் என அதன் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எம்.கேவியஸ் தெரிவித்தார்.
அண்மையில் கட்சியில் நிகழ்ந்த கீழறுப்பு நடவடிக்கைகளுக்கு காரணமாக திகழ்ந்த சில தரப்பினர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஏற்படுத்திய சர்ச்சைகளால் கட்சியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டது.
ஏற்கெனவே பிளவுப்பட்டு கிடந்த இக்கட்சியை மீண்டும் வழக்கிலிருந்து மீட்டெடுத்து புதிய நிர்வாகத்தை அமைத்து ஒரு வலுவான கட்சியாக உருவாக்கியவன் நான்.
ஆனால், அரசியல் என்றாலே 'பணம்' மட்டும்தான் என சிலர் நினைத்து
முன்னெடுத்த காரியங்கள் இன்று கட்சியின் நற்பெயருக்கு களங்கத்தை உண்டாக்கியுள்ளது.
அரசியல் என்றாலே 'பணம்' மட்டும் தான் என அவர்கள் நினைத்தனர். ஆனால் பணத்தை தாண்டியும் மக்களுக்கான சேவைகள் இருப்பதை அவர்கள் உணரவில்லை. கட்சியில் பல பிரச்சினைகள் ஏற்பட்ட போதிலும் மக்களுக்கான எனது சேவை ஒருபோதும் நின்று விடாது. அதற்கு உதாரணம்தான் இதுபோன்ற நிகழ்வுகள் ஆகும்.
கட்சியை மீண்டும் வலுவானதாக உருவாக்க சில ஆக்ககரமான திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. அதன் அடிப்படையில் சீரமைப்பு திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என நேற்று கூட்டரசுப் பிரதேச மைபிபிபி கட்சியின் நோன்பு துறப்பு நிகழ்வில் செய்தியாளர்களிடம் பேசும்போது டான்ஶ்ரீ கேவியஸ் இவ்வாறு கூறினார்.
No comments:
Post a Comment