Wednesday 20 June 2018

பேருந்து தடம் புரண்டது; பச்சிளம் குழந்தை உட்பட 32 பேர் காயம்

கிரிக்-
திரெங்கானுவிலிருந்து கோல பெர்லிஸுக்கு நோக்கி சென்று கொண்டிருந்த விரைவு பேருந்து ஒன்று கிரிக் நெடுஞ்சாலையில் விபத்துக்குள்ளானதில் பச்சிளம் குழந்தை உட்பட 32 பேர் காயமடைந்தனர்.  
இச்சம்பவம் பிற்பகல் 3.00 மணியளவில் நிகழ்ந்தது. கிரீக் மலைப்பாதையிலிருந்து பள்ளத்தில் இறங்கும் போது வேக கட்டுப்பாட்டை இழந்து எதிர்திசை பாதையில் நுழைந்த பேருந்து கால்வாயில் விழ்ந்து தடம் புரண்டது என்று கிரிக் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிண்டன் இஸ்மாயில் செ இஷா தெரிவித்தார்.
இதில் இரு பேருந்து ஓட்டுனர்கள், பச்சிளம் குழந்தை உட்பட 32 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் அவர் கூறினார்.
காயமடைந்த அனைவரும் உடனடியாக அருகிலுள்ள கிரிக் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டனர்.
இந்த விவகாரம் தொடர்பாக 43(1) சட்டப் பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.

No comments:

Post a Comment