Thursday 7 June 2018

அரசாங்க உயரதிகாரிகள் ஆங்கில மொழியில் தேர்ச்சி பெற வேண்டும்- பிரதமர் மகாதீர்

புத்ராஜெயா-
அரசாங்கத் துறைகளில் உள்ள உயர் அதிகாரிகள் ஆங்கில மொழியில் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம் என்பதால் ஆங்கில மொழி தேர்வு கட்டாயமாக்கப்படும் என பிரதமர் துன் மகாதீர் வலியுறுத்தினார்.

ஆங்கில மொழி அத்தியாவசியமானது என்பதால் அரசாங்க உயர் அதிகாரிகள் அதில் பயிற்சி பெற வேண்டும். அரசாங்க உயர் அதிகாரிகள் ஆங்கில மொழியில் தேர்ச்சி பெற்றிருந்தால் அனைத்துலக நிலையிலான கூட்டங்களில் பங்கெடுப்பதோடு நேர்மறையாக கருத்துகளை பெற முடியும் என அவர் சொன்னார்.

இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவை அவர் விவரித்தார்.

No comments:

Post a Comment