கோலாலம்பூர்-
கணவரின் இபிஎப் பணத்திலிருந்து 2 விழுக்காடு தொகையை மனைவியருக்கு செலுத்தும் திட்டத்திற்கு பதிலாக பிரிம் உதவித் தொகையை போன்று பி40 பிரிவுக்குட்பட்ட குடும்ப மாதர்களுக்கு நேரடி உதவித் தொகை வழங்க அரசாங்கம் முன்வர வேண்டும் என பிஎஸ்எம் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
2.5 மில்லியன் பேருக்கு வருடத்திற்கு 3 பில்லியன் வெள்ளி மட்டுமே (வெ.1200 x 2.5 மில்லியன்) செலவாகும் என அதன் மத்திய செயலவை உறுப்பினர் டாக்டர் மைக்கல் ஜெயகுமார் குறிப்பிட்டார்.
பி40 பிரிவுக்குட்பட்ட குடும்ப மாதர்களுக்கு மாதந்தோறும் 100 வெள்ளி வழங்கப்படுவதன் மூலம் அவர்களது தங்களது குடும்ப தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியும்.
வேலை செய்யாத குடும்ப மாதர்களுக்கு கணவரிடமிருந்து பெறப்படும் 2 விழுக்காடு இபிஎப் தொகையுடன் அரசாங்கம் வழங்கும் 50 வெள்ளி அவர்களது கைகளுக்கு கிடைப்பதில்லை.
இபிஎப்- இல் சேமிக்கப்படும் தொகை 50 வயதை அடையும்போது மூன்றில் ஒரு பாகத்தை மட்டுமே அவர்களால் பெற முடியும்.
வீட்டுத் தேவைகளை பூர்த்தி செய்ய பி40 பிரிவினருக்கு அதிகமான செலவீனங்கள் இருப்பதால் அவர்களுக்கு உதவும் திட்டங்களை முன்னெடுப்பது அவசியமாகும்.
'
ஆண்டுக்கு 2.25 பில்லியன் (வெ.50 x 12 3.75 x மில்லியன்) செலவிட தயாராக இருக்கும் அரசாங்கம், பி40 பிரிவுக்குட்பட்ட குடும்பத்தினரின் தேவைகளை பூர்த்தி செய்ய முன் வராதாது ஏன்? என அவர் மேலும் கேள்வி எழுப்பினார்.
No comments:
Post a Comment