கோலாலம்பூர்-
ஒரே மலேசிய மேம்பாட்டு நிறுவனத்தின் (1எம்டிபி) வழி அரசு சொத்து, நிதி ஆகியவை தவறான முறையில் கையாளப்பட்டது தொடர்பில் முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் குற்றஞ்சாட்டப்படலாம்.
பில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள அரசு நிதி முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளது தொடர்பில் முதன்மை சந்தேக பேர்வழியாக நஜிப் கருதப்படுவதால் அவர் மீது குற்றஞ்சாட்டப்படலாம் என பிரதமர் துன் டாக்டர் மகாதீர் கூறினார்.
1எம்டிபி விவகாரத்தில் நிகழ்ந்த தவறுகளுக்கு பொறுப்பேற்கும் வகையில் அதன் தோற்றுநரான அவர் (நஜிப்) மீது இந்த குற்றச்சாட்டு சுமத்தப்படவுள்ளது என அவர் சொன்னார்.
No comments:
Post a Comment