Tuesday 5 June 2018

நாட்டின் கடனை அடைக்க கரங்களை வலுபடுத்துவோம்- மக்கள் கருத்து


புனிதா சுகுமாறன்

ஈப்போ-
நாட்டின் 14ஆவ து  பொதுத் தேர்தலில் ஆட்சியை கைப்பற்றிய பின்னர் நாட்டின் கடன் 1 டிரில்லியன் வெள்ளி ( ஒரு லட்சம் கோடி வெள்ளி) உள்ளது என பிரதமர் மகாதீர் முகம்மது அறிவித்திருந்தார்

அதனையொட்டி நாட்டின் கடனை அடைக்க பலர் தன்னார்வ முறையில் ஆர்வம் காட்டிய நிலையில், மலேசியர்கள் நன்கொடை வழங்குவதற்கு ஏதுவாக 'தாபோங் ஹராப்பான் மலேசியா' திட்டத்தை பிரதமர் துன் மகாதீர் முகம்மது அறிவித்தார்.

நாட்டின் கடனை அடைக்க மலேசியர்கள் நிதியுதவி அளிப்பது சரிதானா?, இந்த திட்டம் வரவேற்கக்கூடியதா?,  இத்திட்டத்திற்கு உங்களின் ஆதரவு உள்ளதா? என 'பாரதம்' மின்னியல் அகப்பக்கம் சிலரிடம் ஆய்வு மேற்கொண்டது.

அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் கருத்துகள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளது.


* குமரன் - பல குரல் மன்னன் (பினாங்கு)
-  "நாடென்ன செய்தது நமக்கு" என கேள்விகள் கேட்பதை விட்டு விட்டு நாட்டின் குடிமகன் எனும் பொறுப்பில் நாட்டின் கடனை அடைக்க முன்வருவது வரவேற்கக்கூடியது.  ஒவ்வொருவரும் அவர்ரவர் விருப்பத்திற்கு ஏற்றவாறு ஒரு தொகையை செலுத்துவதில் எவ்வித சுமையும் கிடையாது.


அ.இளங்கோவன், கோலாலம்பூர்
- இது மிகவும்  ஆக்கக்கரமான திட்டமாகும். நாட்டின் கடனை அடைக்க ஒரு சிறந்த வழி.  தேவையற்ற சில காரியங்களுக்கு  செலவு செய்வதை தவிர்த்து நாட்டிற்கு 'கடமையாக; இந்த திட்டத்தை வரவேற்கலாம்.. முன்னாள் அரசாங்கம் செய்த தவற்றை சரிசெய்வதற்கு  நடப்பு அரசாங்கத்திற்கு நாம் உறுதுணையாக இருக்கும்


 * சுப. சற்குணன்
-  நாடு உண்மையிலேயே கடனில் ழூழ்கியுள்ளது என்றால் நாட்டைக் காக்க மக்கள் உதவ வேண்டும். 'நாடு நமக்கு என்ன செய்தது' என்று கேட்பதை விடுத்து நாடு நன்றாக இருக்க நான் என்ன செய்தேன் என்று ஒவ்வொரு குடிமகனும் சிந்திக்கும் காலம் வந்தால் நாடு கண்டிப்பாகச் செழிப்பாகும். மக்கள் வாழ்வு நலமாகும்.

முடிந்த பொதுத் தேர்தலில் மக்கள் இதைத்தான் செய்தார்கள். 'குடி உயரக் கோல் உயரும். கோல் உயரக் கோன் (ஆட்சி) உயரும் என்பது ஔவையார் பாடல். சிறந்த குடிமக்கள் உள்ள நாட்டில்தான் சிறந்த தலைவர்கள் உருவாகுவார்கள். நமது நாட்டில் சிறந்த ஆட்சி நடக்க மக்களே காரணமாகவும் முன்மாதிரியாகவும் இருக்க வேண்டும். அதுவே சிறந்த  மக்களாட்சி. புதிய மலேசியாவை உருவாக்க  நம் கரங்களை கோர்ப்போம்.


* மு.தமிழரசி
-  நாட்டில் நடக்கும் அனைத்திலும்  மக்களின் பங்களிப்பு இருப்பதில் தவறில்லை. அரசாங்கம் வழங்கும் சலுகைகளை ஏற்றுக் கொள்ளும் நாம், நாட்டிற்கு வரும் பிரச்சினைகளையும் ஏற்று அதற்கேற்ப செயல்படுவதில் தவறில்லையே...  நாட்டின் கடனை அடைக்க 'தாபோங் ஹராப்பான் மலேசியா' திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது வரவேற்கக்கூடியதாகும். அவரவர் விருப்பத்திற்கு உதவி வழங்குவது நல்ல சிந்தனையே.


* கார்த்திக் சந்திரன், சுங்கைசிப்புட்
-  மக்களிடம் சூறையாடி அதாவது வாழ்வியல் சுமைகளை அதிகரித்து கடந்த அர்சு  செய்த தவற்றை  நிவர்த்தி செய்ய புதிய அரசியல் மாற்றம் செய்தோம். ஆனால் இவர்களோ மக்களிடம் நேரடியாக உதவி கோருகிறார்கள். அமைச்சர்களின் சம்பளம் குறைப்பு நல்லது. கடந்த 2 ஆண்டுக்கு முன்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சம்பளம் 40% ஏற்றம் கண்டது. ஏன் அதை மறுபரிசீலனை செய்யவில்லை....நாட்டின் கடனை அடைக்க மக்கள் மட்டுமன்றி சட்டமன்ற உறுப்பினர்களும் உதவி செய்யலாம்.  அன்றாட செலவுகளை சமாளிக்க மக்கள் போராடுகின்றனர்...நாட்டின் கடனை அடைக்க முயல்வது மக்களுக்கு சுமைத்தான்.


* ஜெயசீலன், ஈப்போ
- இவ்வவு கடனையும் அடைப்பது கொஞ்சம் கடினம் தான். அவரவருக்கென்று  சொந்த கடமைகளும் கடன்களும் இருக்கும். அவர்களின் சொந்த கடனை அடைக்க முயல்பார்களே தவிர நாட்டின் கடனை எவ்வாறு அடைப்பார்கள்?


* நம்பி வசந்தன், ஈப்போ
- மக்களிடம் கடன் கேட்பதற்கு முன்பே மக்களே உதவ முன் வந்துள்ளனர்.


கானா ரவி, ஈப்போ
-  பெற்றெடுத்து வளர்த்த என் தாயை காப்பது கடமை என்றால் தாய் நாட்டின் கடனை அடைக்க முனைவது நமது கடமைகளில் ஒன்று.


 * விஜயன்,  மெங்களம்பு
-  நம் நாட்டு கடனை அடைப்பது ஒவ்வொரு குடிமகனின் 'கடமை'. நம் நாடு என்று சொல்வதில் பெருமையில்லை; நாட்டை காக்க முயல்வது பெருமைக்குரியதுதான்.


* லெட்சுமி நாயர்,  ஈப்போ
- நாட்டின் கடனை அடைக்க முயல்வது  ஒவ்வொரு குடிமக்களின் கடமையாகும், அதேபோன்றுதான் தே.மு அரசாங்கத்தின்போது நிகழ்ந்த ஊழல்களையும் தவறுகளையும் தட்டிக் கேட்பது நமது உரிமைதான்.

No comments:

Post a Comment