கோலாலம்பூர்-
12 ஆண்டுகளுக்கு முன்னர் மங்கோலிய மாடல் அழகி அல்தான் துயாவை கொலை செய்ய உத்தரவிட்டது யார்? என்பது தமக்கு தெரியும் என அவரின் தந்தை ஸ்டீவ் சரீபு தெரிவித்தார்.
என் மகளின் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் போலீஸ் அதிகாரி சிருல் அஸார் குறை சொல்லவிரும்பவில்லை.
12 வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற இந்த கொலை தொடர்பில் உண்மை வெளிகொணர மீண்டும் வழக்கு நடத்தப்பட வேண்டும்.
'சிருலுக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனை தொடர்பில் எதையும் கருத்துரைக்க விரும்பவில்லை'.
'இதில் முக்கியமாக கருதப்பட வேண்டியது கொலை செய்ய உத்தரவிட்டது யார் என்பதுதான்...' என கோலாலம்பூரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் வினவினார்.
இந்த கொலை தொடர்பில் உத்தரவிட்டது யார் என்பது போலீசுக்கு தெரியும். ஆனால் அதை ஆழமான ஆராயாமல் மேலோட்டமாகவே கடந்து விட்டனர் என அவர் மேலும் சொன்னார்.
No comments:
Post a Comment