புனிதா சுகுமாறன்
ஈப்போ-
பல்வேறு சமூக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் பேரா இந்திய முஸ்லீம் இயக்கம் (பிரிம்) மார்க்க நிகழ்வுகளின் வழி வசதி குறைந்த மக்களுக்கு உதவி கரம் நீட்டி வருகிறது.
அவ்வகையில் பிரிம் இயக்கத்தின் 10ஆம் ஆண்டு நோன்பு துறப்பு நிகழ்வு இங்குள்ள சீன முஸ்லீம் பள்ளிவாசலில் மிக சிறப்பாக நடந்தது.
இந்நிகழ்வில் உரையாற்றிய பிரிம் இயக்கத் தலைவர் அரிப் அலியா இந்நிகழ்வில் சுமார் 179 வசதி குறைந்த குடும்பங்களுக்கு வீட்டு உபகரணப் பொருட்கள் நோன்புப் பெருநாள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன என்றார்.
அதோடு இந்நிகழ்வில் பக்காத்தான் ஹராப்பானின் "தாபோங் ஹராப்பான் மலேசியா' திட்டத்திற்கு உதவும் நோக்கில் நன்கொடை திரட்டப்பட்டது.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக அமானா நேஷனல் கட்சியின் இந்திய முஸ்லீம் சமூக நலப் பிரிவுத் தலைவர் நூருல் ஹசான் சாகுல் ஹமிட் உட்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டார்.
No comments:
Post a Comment