Thursday, 7 June 2018

1எம்டிபி; தவறு இழைத்தது யாராக இருந்தாலும் தப்ப முடியாது- டொம்மி தோமஸ்

புத்ராஜெயா-
1எம்டிபி நிறுவனத்தில் நிகழ்ந்துள்ள முறைகேடுகள் குறித்த குற்றச்சாட்டுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் வேளையில் அதில் தவறு இழைத்தோர் யாரும் தப்பிக்க முடியாது என புதிய சட்டத்துறைத் தலைவர் டொம்மி தொமஸ் தெரிவித்தார்.

'சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற ரீதியில் ஒருவரும் அதிலிருந்து தப்ப முடியாது'. இந்த வழக்கை அவ்வளவு எளிதில் மூடிவிட முடியாது.
சம்பந்தப்பட்ட ஆவணங்களை ஆராய சம்பந்தப்பட்ட துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் அழைக்கப்படுவர்.

குறிப்பிட்டவர்கள் மீது நிச்சயம் குற்றஞ்சாட்டப்படாது என கூறிய டொம்மி தோமஸ், தவறு இழைக்காத தரப்பினர் இது குறித்து அச்சம் கொள்ள தேவையில்லை என்றார்.

மலேசியா ஒரு ஜனநாயக நாடு. போலீஸ்காரர்கள் நள்ளிரவில் கதவை தட்டுவார்கள் என நாம் பயப்பட வேண்டியது இல்லை.

ஆனால் சட்டத்தை மீறி செயல்படுபவர்கள் சாதாரண குடிமக்களாக இருந்தாலும்  அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர் என இன்று தனது அலுவகத்திற்கு வந்தபோது செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் இவ்வாறு சொன்னார்.

No comments:

Post a Comment