Tuesday 30 October 2018

பெர்சத்துவில் சேர நால்வருக்கு தடை விதிப்பு- டத்தோஶ்ரீ முக்ரிஸ்

அலோர்ஸ்டார்-
அம்னோவில் உள்ள நான்கு பேரை தவிர வேறு யார் வேண்டுமானாலும் பெர்சத்து கட்சியில் இணையலாம் என்று அக்கட்சியின் துணைத் தலைவர் டத்தோஶ்ரீ முக்ரிஸ் மகாதீர் தெரிவித்தார்.

பெக்கான் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஶ்ரீ நஜிப், பாகான் டத்தோ நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஶ்ரீ ஸாயிட் ஹமிடி, பாலிங் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஶ்ரீ அப்துல் அஸிஸ் அப்துல் ரஹிம், பாடாங் ரெங்காஸ் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஶ்ரீ முகமட் நஸ்ரி அப்துல் அஸிஸ் ஆகியோரை அந்த நால்வர் ஆவர்.

இந்நால்வரையும் ஏற்றுக் கொள்வதை  பெர்சத்து கட்சி எப்போதும் சீர் தூக்கி பார்க்காது.

அம்னோவில் உள்ள யார் வேண்டுமானாலும் பெர்சத்துவில் இணையலாம். சில நடைமுறைகளை பின்பற்றி அவர்கள் பெர்சத்து கட்சியில் இணைத்துக் கொள்ளப்படலாம் என டத்தோஶ்ரீ முக்ரிஸ் மேலும் சொன்னார்.

No comments:

Post a Comment