Sunday 14 October 2018

பண அரசியலுக்கு அப்பாற்பட்டவன் நான் - டான்ஶ்ரீ ராமசாமி


குபாங் பாசு-
பண அரசியலுக்கு அப்பாற்பட்டவன் நான். பண அரசியல் நடத்த வேண்டிய அவசியம் எனக்கில்லை  என்று மஇகா தேசியத் துணைத் தலைவர் வேட்பாளர் தொழிலதிபர் டான்ஸ்ரீ எம்.ராமசாமி  வலியிறுத்தினார்.

கட்சியில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்ற எண்ணத்திலேயே துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட முனைந்துள்ளேன். பண அரசியல் நடத்தும் அளவுக்கு பதவி வெறியும் என்னிடம் இல்லை.

மஇகா இழந்து நிற்கும் இந்திய சமுதாயத்தின் ஆதரவு மீண்டும் கட்சிக்கு திரும்ப வேண்டும் என்ற எண்ணத்திலேயே இத்தேர்தலில் களமிறங்கியுள்ளேன்.

மஇகா இப்போது எதிர்க்கட்சியாக உள்ளது. அரசாங்கத்தில்  அங்கம் வகிக்காத கட்சியாக மஇகா திகழும்போது பண அரசியலை நடத்த வேண்டிய அவசியம் எனக்கு எதற்கு?

பதவிதான் முக்கியம் என்றால் முந்தைய தேர்தலிலேயே கறமிறங்கியிருப்பேன். ஆனால் எனக்கு இப்போது முக்கியமானது கட்சி உருமாற்றம் பெற வேண்டும்,  இந்திய சமுதாயத்தின் ஆதரவை மீண்டும் பெற வேண்டும்.  அது மட்டும்தான்.

துன் வீ.தி.சம்பந்தன் காலத்தில் செழிப்படைந்திருந்த மஇகாவின் பொற்காலம் மீண்டும் திரும்ப வேண்டும். அதற்கு கிளைத் தலைவர்கள் தெளிவான சிந்தனையில் கட்சியின் எதிர்காலம் கருதி அடுத்த தலைமைத்துவத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்.

பண அரசியல் நடத்துவதாக என் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளுக்கு காலம் பதில் சொல்லும் என கூறிய, அதற்கு மஇகா தலைவர்கள் தக்க பதிலடி கொடுப்பர் என்று அவர் சொன்னார்.

இச்சந்திப்புக் கூட்டத்தில் குபாங் பாசு மஇகா தலைவர் சுரேஸ் உட்பட கிளைத் தலைவர்களும் பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment