Tuesday 2 October 2018
ஆஸ்ட்ரோவின் 4ஆவது அனைத்துலக இந்திய வர்த்தக விழா, தீபாவளி கொண்டாட்டம் 2018
கோலாலம்பூர்-
ஆஸ்ட்ரோவின் மாபெரும் 4ஆவது அனைத்துலக இந்திய வர்த்தக விழா, தீபாவளி கொண்டாட்டம் இவ்வாண்டும் மிகப் பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் 4ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 7ஆம் தேதி வரை, 4 நாட்களுக்கு ஜிஎம் கிள்ளான் வளாகத்தில் மதியம் 12 மணி முதல் இரவு 11 மணி வரை நடைபெறவுள்ளது.
100க்கும் மேற்பட்ட உள்ளூர், வெளியூர் வர்த்தக முகப்புகளில் வருகையாளர்கள் பாரம்பாரிய உடைகள், இனிப்பு பாண்டங்கள், ஆபரணங்கள், உணவு வகைகள், தொழில்நுட்பம், காப்புறுதி, இயற்கை வளம், தொலைத்தொடர்பு, சுற்றுலா முகவர்கள் என இன்னும் பலவற்றை இவ்வாண்டு இந்நிகழ்ச்சியில் எதிர்பார்க்கலாம்.
மேலும், ஆடல் பாடல், கேளிக்கை விளையாட்டு, பிரபலங்களின் சந்திப்பு, உள்ளூர் நட்சத்திரங்களின் வருகை, ராகா, மண்ணின் மைந்தர்களின் கலைநிகழ்ச்சி என 4 நாட்களுக்கு இந்நிகழ்ச்சியில் இடம்பெறவுள்ளது.
எதிர்வரும் 5ஆம் தேதி இரவு 7 மணிக்கு அனைத்துலக இந்திய வர்த்தக விழா, தீபாவளி கொண்டாட்டத்தின் அதிகாரப்பூர்வ தொடக்க விழாவில் தமிழ்த் திரைப்பட நடிகர் அருண் விஜய் கலந்து கொள்ளவுள்ளார். இவருடன் நம்முடைய உள்ளூர் கலைஞர்களான பாலன் கேஸ்மிர், புனிதா ராஜா, ஷஸ்தான் ஆகியோரின் படைப்புகளும் இடம்பெறவுள்ளது.
அதுமட்டுமின்றி, Astro Circle ஏற்றி நடத்தும் போட்டிகளிலில் கலந்து கொண்டு பல அரிய பரிசுகளைத் தட்டிச் செல்லும் வாய்ப்புக் காத்துக் கொண்டிருக்கின்றது. அதை வேளையில், அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட சாம்ராட் பேக் குறித்த தகவல்களையும் இந்நிகழ்ச்சியில் பெற்று கொள்ளலாம்.
மேல் விவரங்களுக்கு www.astroulagam.com <http://www.astroulagam.com> அல்லது www.facebook.com/AstroUlagam <http://www.facebook.com/AstroUlagam> அகப்பக்கங்களை நாடுங்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment