Thursday 25 October 2018

துப்பாக்கி சூடுபட்ட போலீஸ்காரர் மரணம்

ஈப்போ-
தலையில் துப்பாக்கிச் சூட்டு காயத்துடன் போலீஸ்காரர் ஒருவர் இறந்து கிடக்க காணப்பட்டார்.

பெக்கான் பாரு போலீஸ் நிலையத்தின் குடியிருப்புப் பகுதிக்கு வெளியே இச்சம்பவம் நிகழ்ந்தது.

கார்ப்பெரல் பதவியை வகிக்கும் 29 வயதுடைய அந்த போலீஸ்காரர்  தன்னுடைய துப்பாக்கியை பயன்படுத்தி சுடப்பட்டிருக்கிறார்.

இன்று காலை 5.00 மணியிலிருந்து 7.00 மணிக்கு இடைபட்ட காலத்தில் அவர் இறந்திருக்கக்கூடும் என நம்பப்படுகிறது.

ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த அவரின் சடலத்தை துப்புரவுப் பணியாளர் ஒருவர் காலை 7.55 மணியளவில் பார்த்திருக்கிறார்.

சவப்பரிசோதனைக்காக அவ்வாடவரின் சடலம் ராஜா பெர்மாய்சூரி மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்ட வேளையில் இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment