Thursday 11 October 2018

டத்தோஶ்ரீ சரவணனை எதிர்க்கிறார் டான்ஶ்ரீ ராமசாமி- மஇகா துணைத் தலைவர் பதவிக்கு நேரடி மோதல்


ரா.தங்கமணி,  படங்கள்: கினேஷ் ஜி

கோலாலம்பூர்-
மஇகா தேசிய துணைத் தலைவர் பதவிக்கு நேரடி மோதல் ஏற்பட்டுள்ளது.

இன்று நடைபெற்ற மஇகா உயர்மட்ட பதவிகளுக்காக வேட்புமனுத் தாக்கலில் துணைத் தலைவர் பதவிக்கு தொழிலதிபர் டான்ஸ்ரீ எம்.ராமசாமியும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ எம். சரவணனும் நேரடி மோதலை சந்திக்கின்றனர்.

மூன்று உதவித் தலைவர் பதவிக்கு 10 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். கேமரன் மலை நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ சி.சிவராஜ்,  டத்தோ டி,மோகன், முன்னாள் துணை அமைச்சர்கள் டத்தோ ப,கமலநாதன், டத்தோ தோ.முருகையா ஆகியோர் உட்பட 10 பேர் போட்டியிடுகின்றனர்.

21 மத்திய செயலவை உறுப்பினர் பதவிக்கு 44 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

ம இகா உயர்மட்ட பதவிகளுக்கான தேர்தல் வரும் 20ஆம் தேதி நடைபெறவுள்ளது.

No comments:

Post a Comment