Wednesday 10 October 2018

அரசியல் தாக்குதலாலே சீன முதலீடு, சுற்றுப்பயணிகள் குறைந்தன- நஜிப் குற்றச்சாட்டு


பெட்டாலிங் ஜெயா-
அரசியல் ரீதியிலான தாக்குதல்களே சீன முதலீடுகளும் சுற்றுலா பயணிகளும் வெகுவாக குறைந்ததற்கு காரணம் என்று முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் கூறினார்.

நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தல் வரை நீடித்த இந்த தாக்குதல் நாட்டின் பொருளாதாரத்தை பெருமளவு பாதிப்படையச் செய்தது.

சீன சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 35 விழுக்காடு சரிவு கண்டுள்ளது என ஊடகங்கள் இன்று குறிப்பிட்டுள்ளன. இது முதல் முறையாக நிகழ்ந்தது ஆகும்.

கடந்த காலங்களில் சீனாவிலிருந்து மலேசியாவுக்கு ஆண்டுதோறும் வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.

சீன சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை பெருமளவு சரிவு கண்டதால் மூசாங் கிங் டுரியான் விற்பனையாளர்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்தனர்.

டுரியான், சுற்றுலா துறை மட்டுமல்லாது செம்பனை எண்ணெய் ஏற்றுமதியும்
14ஆவது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் சரிவு கண்டுள்ளது.

மலேசியாவின் மிகப் பெரிய துறைகளில் சுற்றுலா துறை மிகப் பெரியதாகும். கடந்த 2016இல் நாட்டின் பொருளாதாரத்தில் 13.7% (வெ.168 மில்லியன்) பங்காற்றியது.

இத்துறையில் நேரடியாகவும் மறைமுகமாகவும் 1.73 மில்லியன் வேலை வாய்ப்புகள் இருந்தன என்று அவர் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment