Friday 12 October 2018

மன நல பாதிப்பில் 40% மலேசியர்கள் - துணைப் பிரதமர்

புத்ராஜெயா-
மலேசியர்களில் 40 விழுக்காட்டினர் வாழ்நாள் முழுவதும் மனநல பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர் என்று துணைப் பிரதமர் டத்தோஶ்ரீ வான் அஸிஸா வான் இஸ்மாயில் தெரிவித்தார்.

273,203 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 18,336 மலேசியர்கள் மன அழுத்தத்தின் காரணமாக மனநல பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர் என்று 2017இல் சுகாதார அமைச்சு மேற்கொண்ட ஆய்வு கூறுகிறது.

இதில் 11,811 பேர் லேசான மன அழுத்தத்திற்கும் 3,680 பேர் மிதமான மன அழுத்தத்திற்கும் 1,682 பேர் கடுமையான மன அழுத்தத்திற்கும் ஆளாகியுள்ளனர் என்று இங்கு நடைபெற்ற  2018 உலக மன நல ஆரோக்கிய தினத்தில் உரையாற்றுகையில் அவர் இவ்வாறு சொன்னார்.

No comments:

Post a Comment