Thursday 25 October 2018

ஒரே நேரத்தில் தேசிய, மாநில பதவிகளுக்கான தேர்தலே குளறுபடிக்கு காரணம்- டான்ஶ்ரீ விக்னேஸ்வரன்

கோ.பத்மஜோதி

கோலாலம்பூர்-
தேசிய, மாநில பதவிகளுக்கான தேர்தல்கள் ஒரே நேரத்தில் நடத்தப்பட்டதே மஇகா தேர்தலில் ஏற்பட்ட குளறுபடிகளுக்கு முதன்மை காரணம் என கருதப்படுவதாக அக்கட்சியின் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் காணொளியில் இடம்பெற்றிருப்பது மாநில தேர்தலுக்கான சீட்டுகள் குறித்த கருத்தே தவிர தேசிய நிலையிலான
பதவிகளுக்கான தேர்தல் அல்ல.

இவ்விரு பதவிகளுக்குமான தேர்தல் ஒரே நேரத்தில் நடத்தப்பட்டதால்  சில
தொகுதித் தலைவர்களின் ஒழுக்கமற்ற செயல் இன்று பல்வேறு பிரச்சினைகளுக்கு வழிவகுத்து விட்டது.

ஆனாலும் தேர்தல் முறைகேடுகள் குறித்து பெறப்பட்டுள்ள புகார்களுக்கு உரிய நடவடிக்கை காண தேர்தல் நடவடிக்கைக் குழு உரிய நடவடிக்கை எடுக்கும்.

புதிய சட்டமுறைகளுக்கு ஏற்ப நடத்தப்பட்ட இத்தேர்தல் சுமூகமான முறையில் நடத்தப்பட்டது. சில இடங்களில் நடைபெற்ற அசம்பாவிதங்களால் மஇகாவின் தேர்தல் விமர்சிக்ககூடாது.

தற்போதையை நிலையில் மஇகாவில் மட்டுமல்லாது பிகேஆர், பிபிபிஎம் போன்ற கட்சிகளில் அரங்கேறியுள்ளது.  மஇகா ஏற்கெனவே 2013இல் சந்தித்த நெருக்கடியை தற்போதும் எதிர்கொள்ள விரும்பவில்லை என நேற்று நடைபெற்ற மத்திய செயலவைக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் டான்ஶ்ரீ விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment