Thursday 4 October 2018

தீபாவளிச் சந்தை கலை நிகழ்ச்சி; பேரா இந்திய அரசாங்க பணியாளர் கலாச்சார மன்றம் பொறுப்பேற்றது


ரா.தங்கமணி

ஈப்போ-
ஈப்போ லிட்டில் இந்தியா வளாகத்தில் நடைபெறவுள்ள தீபாவளிச் சந்தையையொட்டி நடைபெறவுள்ள  கலை நிகழ்ச்சிக்கு பேரா மாநில இந்திய அரசாங்க பணியாளர் கலாச்சார மன்றம் பொறுப்பேற்றுள்ளது என்று புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் ஆதி.சிவசுப்பிரமணியம் தெரிவித்தார்.

வரும் 26ஆம் தேதி தொடங்கி நவம்பர் 4ஆம் தேதி வரை நடைபெறும்  இந்த தீபாவளி கலைநிகழ்ச்சியை நடத்தும் இசைக்குழுவினர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இந்த கலைநிகழ்ச்சியில் பங்கெடுக்கும்  ஆட்சிக்குழு உறுப்பினர் அனைவரும் முடிவு செய்யப்பட்டுள்ளனர் என்று நேற்று மாநில அரசு செயலகத்தில் நடைபெற்ற சந்திப்புக் கூட்டத்தில் அவர் சொன்னார்.

இவ்வாண்டு நடத்தப்படும் தீபாவளிச் சந்தை மக்களின் தீபாவளி கொண்டாட்டமாகும். ஆட்சி மாற்றம்  முதல் மக்களின் ஒவ்வொரு குதூகலமும் அவர்களின் கொண்டாட்டமாக அமைந்திட வேண்டும்.

அதன்படியே தீபாவளிச் சந்தையும் கலை நிகழ்ச்சியும் மக்களுக்கான கொண்டாட்டமாக அமைந்திருக்கும் என்று சிவசுப்பிரமணியம் கூறினார்.

இந்த சந்திப்புக் கூட்டத்தில் இந்திய அரசாங்கப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment