Thursday 25 October 2018

எதிர்க்கட்சியினர் என்ற எண்ணத்தில் நாம் செயல்பட வேண்டும்- டத்தோ டி.மோகன்

ரா.தங்கமணி

கோலாலம்பூர்-
ஆளும் கட்சியினர் என்ற நினைப்பிலிருந்து ம இகாவினர் முதலில் வெளியேற வேண்டும். இப்போது தாங்கள் எதிர்க்கட்சி என்ற எண்ணத்தில் ம இகாவினர் துரிதமாக செயல்பட வேண்டும் என்று அதன் உதவித் தலைவர் டத்தோ டி.மோகன் வலியுறுத்தினார்.

நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் ஆட்சி அதிகாரத்தை இழந்து விட்ட தேசிய முன்னணியில் பங்காளி கட்சியான மஇகா இப்போது சிறந்த எதிர்க்கட்சியாக திகழ வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

ஆளும் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி முன்னெடுக்கும்  நற்காரியங்களுக்கு ஆதரவு கொடுக்கும் அதே வேளையில் இந்திய சமுதாயத்திற்கு கிடைக்க வேண்டிய உரிமைகளுக்கு குரல் கொடுக்கும் கட்சியாகவும் ம இகா திகழ்ந்திட வேண்டும்.

வலுவான எதிர்க்கட்சியாக மஇகா உருவெடுப்பதோடு மஇகாவினரின் ஆக்ககரமான செயல்பாடுகளின் வழி இழந்து விட்ட இந்திய சமுதாயத்தின்  உரிமைகளை மீட்டெடுக்கவும் உதவித் தலைவர் எனும் முறையில் எனது பங்கினை செயல்படுத்துவேன்.

மஇகாவின் எதிர்கால நலனை காக்கும் பொருட்டு தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன், துணைத் தலைவர் டத்தோ எம்.சரவணன், உதவித் தலைவர்கள் டத்தோ சி.சிவராஜ், டத்தோ தோ.முருகையா, மத்திய செயலவை உறுப்பினர்கள் ஆகியோருடன்  ஒன்றிணைந்து பணியாற்றவிருப்பதாக டத்தோ மோகன் மேலும் சொன்னார்.

No comments:

Post a Comment