நாட்டின் பட்ஜெட் விரைவில் உபரி பட்ஜெட்டாக நிதியமைச்சர் லிம் குவான் எங் வழங்க தவறினால் அவரை சுட்டு விடுவேன் என்று பிரதமர் துன் மகாதீர் நகைச்சுவையுடன் கூறினார்.
போர்ட்டிக்சன் இடைத் தேர்தல் பரப்புரையில் உரையாற்றிய மகாதீர், லிம் குவான் எங் நிர்வாகத்தில் பினாங்கு மாநில அரசு பட்ஜெட் உபரியை பெற்று திகழ வழி கன்டுள்ளார்.
2008 முதல் இந்த உபரி பட்ஜெட்டை பினாங்கு மாநிலம் பதிவு செய்துள்ளது. 7 ஆண்டுகளாக பற்றாக்குறை பட்ஜெட்டை தாக்கல் செய்தாலும் முடிவில் உபரி பட்ஜெட் உருவாக்குவதில் பினாங்கு வெற்றி கண்டுள்ளது.
பினாங்கு மாநிலத்தைப் போன்று நாட்டின் பட்ஜெட்டிலும் உபரியை நமக்கு லிம் குவான் எங் பெற்று தர வேண்டும். இல்லையேல் நான் அவரை சுட்டு விடுவேன் என அவர் சொன்னார்.
பின்னர் நான் அப்படியெல்லாம் செய்ய மாட்டேன் என்று பலத்த கரவொலிக்கிடையே அவர் சொன்னார்.
வரும் நவம்பர் 2ஆம் தேதி பக்காத்தான் ஹரப்பான் அரசாங்கம் தனது முதலாவது பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment