Wednesday 10 October 2018

தலை துண்டிப்பு; உடல் கழிவுத் தொட்டியில் வீசப்பட்டது- ஆடவரின் வெறிச்செயல்


ஈப்போ-
ஒரு முதியவரின் தலை, கை, கால் ஆகியவை துண்டிக்கப்பட்ட நிலையில் அவரின் உடல் வீட்டின் கழிவுத் தொட்டியில் போடப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

சிம்மோர், கந்தான் நியூ வில்லேஜ் பகுதியில் உள்ள வீடொன்றில் சோதனை மேற்கொண்ட போலீசார் கொலை செய்யப்பட்ட ஆடவரின் உடலை மீட்டனர்.

74 வயதான யூ சு கிம் எனும் ஆடவரின் தனது 52 வயதுடைய மகனாலேயே கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்ட ஆடவரின் தலை, கை, கால் ஆகியவை துண்டிக்கப்பட்டு வீட்டின் பின்னால் புதைக்கப்பட்டது.

அதோடு உடல் கழிவுத் தொட்டியில் போடப்பட்டிருந்தது என்று பேரா மாநில குற்றப்புலனய்வு பிரிவு தலைவர் துணை ஆணையர் யாஹ்யா அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.

கொலையுண்ட ஆடவர் ஷாபு வகை போதைப்பொருளை பயன்படுத்தி வந்த தனது மகனை திட்டிக் கொண்டே இருப்பதனால் இக்கொலை நடந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. சம்பந்தப்பட்ட ஆடவரை கைது செய்யப்பட்டுள்ளார்.

இக்கொலைக்கு பயன்படுத்தப்பட்ட 60சென்டிமீட்டர் பாராங் கத்தியை கண்டெடுத்துள்ளதாக அவர் சொன்னார்.

கழிவுத் தொட்டியில் வீசப்பட்ட ஆடவரின் உடலை தீயணைப்பு, மீட்புப் படையினர் மீட்டனர்.

இக்கொலைச் சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமை நிகழ்ந்திருக்கலாம் னெறு அவர் மேலும் சொன்னார்.

No comments:

Post a Comment