Monday 29 October 2018

தேமுவில் மக்கள் சக்தி கட்சி; உருமாற்றத்திற்கு வழிவகுக்கும்- டத்தோஶ்ரீ தனேந்திரன்

ரா.தங்கமணி

ஈப்போ-
உருமாற்றம் காணவுள்ள தேசிய முன்னணி கூட்டணியில் மலேசிய மக்கள் சக்தி கட்சி இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது. ஒரு போராட்ட காலத்திலேயே நாங்கள் தேசிய முன்னணியுடன் இணைய முயற்சிக்கிறோம் என்று அதன் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ ஆர்.எஸ்.தனேந்திரன் தெரிவித்தார்.

நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் தேமு கூட்டணியில் இடம்பெற்றிருந்த 13 கட்சிகளில் 10 கட்சிகள் வெளியேறி விட்டன. ஆயினும் தேமுவின் போராட்ட காலத்திலும் மலேசிய மக்கள் சக்தி கட்சி துணையாக நிற்கிறது.

தேமுவின் உருமாற்றத்தில் புதிய கட்சிகள், இயக்கங்கள் இடம்பெறலான் என்று அதன் தலைவர் டத்தோஶ்ரீ ஸாயிட் ஹமிடி கோடி காட்டியுள்ளார். அவ்வகையில் மக்கள் சக்தி கட்சிக்கு பிரகாசமான வாய்ப்பு உள்ளது.

இப்போது ஆளும் கட்சியாக பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி மீது மக்கள் நம்பிக்கை இழக்கத் தொடங்கி விட்டனர். ஆட்சியை கைப்பற்றி ஆறு மாதகாலம் நிறைவடைந்துள்ள நிலையில் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் பக்காத்தான் ஹராப்பான் தோல்வி கண்டுள்ளது.

மக்களின் நம்பிக்கை மீண்டும் பெறும் வகையில் தேசிய முன்னணி உருமாற்றம் காண்பதற்கு மலேசிய மக்கள் சக்தி கட்சி உறுதுணையாக இருப்பதோடு ஆக்ககரமாகவும் செயல்படும் எனவும் டத்தோஶ்ரீ தனேந்திரன் கூறினார்.

No comments:

Post a Comment