Wednesday 10 October 2018

வறுமையில் வாடும் மக்களுக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன


ரா.தங்கமணி

பெருவாஸ்-
பேரா மாநில அரசின்  உணவுப் பொட்டலம் அன்பளிப்பு திட்டத்தின் கீழ் சங்காட் குரிங்கிலுள்ள 15 இந்தியக் குடும்பங்களுக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன

பெருவாஸ் நாடாளுமன்ற உறுப்பினரின் இந்திய நலப் பிரிவு அதிகாரி தினகரன் கோவிந்தசாமி இந்த அன்பளிப்புப் பொட்டலங்களை எடுத்து வழங்கினார்.

வறுமை நிலையில் வாழும் மக்களுக்கு உதவிடும் வகையில் மேற்கொள்ளப்படும் இந்த திட்டம் வறுமையில் வாடுபவர்களை சென்றடைய வேண்டும் என்ற எண்ணத்தில் தானே களமிறங்கி  வழங்குவதாக அவர் சொன்னார்.

இம்மக்களுக்கு மாதந்தோறும் இந்த உதவிப் பொருட்கள் வழங்கப்படும் எனவும் மாநில அரசின் திட்டங்கள் மக்களைச் சென்றடைய வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

பெருவாஸ் நாடாளுமன்றத்தில் உள்ள மூன்று சட்டமன்றத் தொகுதிகளான பந்தாய் ரெமிஸ், பெங்கலான் பாரு, அஸ்தாகா ஆகியவற்றில் உள்ள வறுமையில் வாடும் இந்தியர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கான உதவிகள் சென்றடைய வழி வகுக்கப்படும்.

அதிகமான இந்தியர்கள் உள்ள பகுதிகளில் இந்த உதவித் திட்டம் மேற்கொள்ளப்படும் என்று தினகரன் மேலும் சொன்னார்.

No comments:

Post a Comment