Wednesday 13 May 2020

திருடர்களின் கைவரிசையில் பாதித்த மூதாட்டி முனியம்மாவுக்கு வீரன் உதவி

தைப்பிங்-
கோவிட்-19 வைரஸ் தொற்றால் அமலாக்கம் செய்யப்பட்ட நடமாட்ட கட்டுப்பாட்டு நேரத்தின்போது மூதாட்டி முனியம்மாவின் வீட்டுக்குள்  3 கொள்ளையர்கள் நுழைந்தனர்.

அம்மூதாட்டியை  பாராங்கத்தி முனையில் மிரட்டி வீட்டிலிருந்த  ரொக்கம், தங்க நகைகள், மின்சாரப் பொருட்கள் உட்பட மளிகைப் பொருட்களையும் கொள்ளையிட்டுச் சென்றனர்.

தைப்பிங்கில் நடந்த இச்சம்பவத்தினால் பெரும் பாதிப்புக்கு ஆளான மூதாட்டி முனியாம்மாவை நேரில் சந்திந்த மஇகா மத்திய செயலவை உறுப்பினரும் தைப்பிங் மாநகர் மன்ற உறுப்பினருமான  மூ.வீரன் ஆறுதல் கூறியதோடு உடனடி தேவையாக மளிகைப் பொருட்களை கொடுத்து உதவினார்.

No comments:

Post a Comment