Thursday 14 May 2020

முக்ரீஸை விடாமல் துரத்தும் மகாதீரின் கர்மா

ரா.தங்கமணி

கோலாலம்பூர்-
'அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்' அது அந்த காலம்... 'அரசன் நின்று கொல்வான் தெய்வம் அன்றே கொல்லும்' இது இந்த காலம் என்ற திரைப்பட வசனத்தை யாரும் மறந்திருக்க மாட்டோம்
இந்த வசனம் யாருக்கு பொருந்துமோ இல்லையோ நடப்பு சூழலில் முன்னாள் பிரதமர் துன் மகாதீருக்கு அச்சு அசலாக பொருந்துகிறது.

மிகுந்த எதிர்பார்ப்புடனும் நம்பிக்கையுடனும் மக்கள் ஒரு மாற்றத்தை நோக்கி ஆட்சியில் அமர வைத்த பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி அரசு கவிழ்ந்த்தற்கு துன் மகாதீர் முதன்மை காரணியாவார்.

ஜனநாயகக் கோட்பாட்டில் அமையபெற்ற ஆட்சியை சுயநல அரசியலுக்காக பலர் தவறவிட்ட சூழலிலும் அதிகார மையமாக திகழ்ந்த மகாதீர் பக்காத்தான் ஹராப்பானை  காப்பாற்றி இருக்கலாம்.

ஆனால் சுயநலவாதிகள் கூடாரத்தின் 'காட்ஃபாதராக' திகழும் மகாதீர், பக்காத்தான் ஹராப்பான் ஆட்சியை காட்டிலும் தனது சுயநல அரசியலை மட்டுமே முன்னெடுத்தார்.
இப்படி தன்னை மட்டுமே சிந்தித்து மக்களை துச்சமாக மதித்தன் விளைவு பக்காத்தான் ஹராப்பான் கவிழ்ந்து பெரிக்காத்தான ஆட்சியில் அமர்ந்தது.

மக்களின் ஜனநாயக நம்பிக்கையை குழி தோண்டி புதைத்த மகாதீரின் 'கர்மா' சும்மா விட்டு விடுமா?

யாரை தன்னுடைய அரசியல் வாரிசாக கருதினாரோ அவரின் அரசியல் அஸ்திவாரத்தையே ஆட்டிபார்க்கும் வகையில் 'கர்மா' தனது ஆட்டத்தை தொடங்கியுள்ளது.

கெடா மந்திரி பெசாராக பதவி வகித்த துற் மகாதீரின் புதல்வர் டத்தோஸ்ரீ முக்ரீஸ் மகாதீருக்கான ஆதரவை இரு பிகேஆர் சட்டமன்ற உறுப்பினர்கள் மீட்டுக் கொண்டதை அடுத்து அவரின் ஆட்சி கவிழ்ந்தது.

மக்களின் நம்பிக்கையை சீர்குலைத்து அரசியலில் தான் மட்டுமே 'ராஜாதி ராஜனாக' உலா வர வேண்டும் என்ற மகாதீரின் கணக்கு இப்போது தப்புக் கணக்காகி போனது.

ஏற்கெனவே ஒருமுறை தேமுவுக்கு எதிரான  மகாதீரின் நடவடிக்கைகளால் மந்திரி பெசார் பதவியை இழந்த முக்ரீஸ், தற்போதும் மகாதீர் செய்த தவறாலேயே மீண்டும் தண்டிக்கப்பட்டுள்ளார்.

முக்ரீஸை விடாமல் துரத்தும் மகாதீரின் 'கர்மா' அவரை அரசியலில் ஜொலிக்க விடுமா? பாதாளக்குழியில் தள்ளுமா?

No comments:

Post a Comment