மாலத்தீவு அதிபர் தேர்தல்: இப்ராஹிம் முகமது வெற்றி
மாலி-
மாலத்தீவில் எதிர்கட்சியின் இப்ராஹிம் முகமது 58.3 விழுக்காடு வாக்குகள் பெற்று ஆட்சியை பிடித்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தெற்காசிய நாடான, மாலத்தீவில் அதிபர் அப்துல்லா யாமீன் அதிபராக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் செப்.,23இல் நடந்தது. ஆளும் கட்சியான மாலத்தீவு முன்னேற்ற கட்சி சார்பில் அதிபர் யாமீனும், எதிர்கட்சியான மாலத்தீவு ஜனநாயக கட்சி சார்பில் இப்ராஹிம் முகமதுவும் போட்டியிட்டனர். மொத்தம் 92 விழுக்காடு வாக்குகள் பதிவாகின.
வாக்குப்பதிவு நிறைவடைந்தபின் வாக்குகள் எண்ணும் பணி நடந்தது. இதில் எதிர்க்கட்சியின் இப்ராஹிம் முகமது 58.3 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருப்பதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இப்ராகிம் முகமது 1,33,808 வாக்குகளும், யாமீன் 95,526 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
செய்தியாளர்களைச் சந்தித்த இப்ராஹிம் முகமது வெற்றி குறித்து தெரிவிக்கையில், மக்களின் விருப்பத்தை மதித்து, மென்மையாகவும், சமாதானமாகவும் அதிகாரத்தை மாற்ற யாமீனை அழைப்பதாக தெரிவித்தார்.
No comments:
Post a Comment