புத்ராஜெயா-
போர்ட்டிக்சன் நாடாளுமன்றத் தொகுதி இடைத் தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்தது.
இத்தொகுதிக்கான வேட்புமனுத் தாக்கல் வரும் 29ஆம் தேதி நடைபெறும் என்றும் வாக்களிப்பு வரும் அக்டோபர் 13இல் நடத்தப்படும் என்றும் தேர்தல் ஆணையத்தின் துணைத் தலைவர் டான்ஸ்ரீ ஒத்மான் மாமுட் தெரிவித்தார்.
வேட்புமனு நாள் தொடங்கி 14 நாட்களுக்கு பிரச்சார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்ற அவர், அக்டோபர் 12ஆம் தேதி இரவு 11.59 மணிக்கு பிரச்சார நடவடிக்கைகள் நிறுத்தப்படும் என்றார்.
போர்ட்டிக்சன் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ டேனியல் பாலகோபால் அப்துல்லா பதவி விலகியதைத் தொடர்ந்து அங்கு இடைத் தேர்தல் நடத்தப்படுகிறது.
நாட்டின் 8ஆவது பிரதமராக பொறுப்பேற்பதற்கு ஏதுவாக டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நாடாளுமன்றத்தில் நுழைய இந்த இடைத் தேர்தல் நடத்தப்படுகிறது.
No comments:
Post a Comment