Wednesday, 12 September 2018

ஒவ்வோர் ஆண்டும் 8 லட்சம் பேர் தற்கொலை செய்கின்றனர் - உலக சுகாதார அமைப்பு


நியூயார்க்-
தினமும் தற்கொலை செய்திகள் இல்லாத நாளிதழ்களே இல்லை என்று கூறும் அளவுக்கு அற்ப காரணங்களுக்கெல்லாம் தற்கொலை நிகழ்வுகள் அசாதாரணமாகி விட்டது.

தனிமை, புறக்கணிப்பு, பயம், கவலை, வறுமை, குடும்ப வன்முறை, பாலியல் வன்முறை, விரக்தி போன்றவையே தற்கொலை செய்துகொள்வதற்கான முக்கியக் காரணங்களாக உள்ளன.

ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 10ஆம் தேதி தற்கொலை தடுப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது. இதனை ஒட்டி, பல்வேறு பொதுநல இயக்கங்கள் தற்கொலை எதிர்ப்பு பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றது.

இந்நிலையில், உலக சுகாதார அமைப்பு விடுத்துள்ள அறிக்கையின் படி, ஒவ்வோர் ஆண்டும் சுமார் 8 லட்சம் பேர் தற்கொலை செய்து கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏழ்மை, நடுத்தர வர்க்க நாடுகளில்தான் தற்கொலைகள் அதிகம் நடப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூக அழுத்தங்கள், ஏற்றத்தாழ்வுகளும் ஒருவரது தற்கொலைக்கு தூண்டுதலாக உள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment