கோலாலம்பூர்-
பிடிபிடிஎன் கடனைப் பெற்றவர்கள் தங்களின் கடனைத் திரும்ப செலுத்தாமல் இருப்பதை எண்ணி தாம் வெட்கப்படுவதாக பிரதமர் துன் மகாதீர் கூறியதைத் தொடர்ந்து, பிடிபிடிஎன் கடனைப் பெற்றவர்களுக்குக் கால அவகாசம் வழங்கியது இப்போதைய நடப்பு அரசாங்கம் பக்காத்தான் ஹராப்பான் தான் என்பதால் இதைக் குறித்து பிரதமர் வெட்கப்படவேண்டியதில்லை என முன்னாள் இளைஞர், விளையாட்டுத் துறை அமைச்சர் கைரி ஜமாலுடின் சாடியுள்ளார்.
மாதச் சம்பளம் வெ.4,000 உயர்ந்த பின்னர், பிடிபிடிஎன் கடனைப் பெற்றவர்கள் தங்களின் கடனைச் செலுத்தலாம் என வாக்குறுதி கொடுத்தது பக்காத்தான் ஹராப்பான் தான். அதோடு மட்டுமில்லாமல் அவர்களை கறுப்புப் பட்டிலிருந்து நீக்கியதும் நீங்கள்தானே? என கைரி கேள்வி எழுப்பியுள்ளார்.
பிடிபிடிஎன் கடன் திரும்ப செலுத்தப்படாத தொகை இதுவரை 3.6 பில்லியனாக எட்டியுள்ளது. இந்தத் தொகையைக் கண்டு எனக்கே வெட்கமாக உள்ளது, ஆனால் கடனைப் பெற்றவர்கள் வெட்கப்படவில்லை என மகாதீர் கூறியதை கைரி இங்கு சுட்டிக் காட்டினார்.
No comments:
Post a Comment