Saturday 22 September 2018

வசந்தபிரியாவின் மரணம் ஒரு தற்கொலையே- நீதிமன்றம் தீர்ப்பு

ஜோர்ஜ்டவுன்-
ஆசிரியரின் கைப்பேசி களவு போனது தொடர்பில் தூக்கு மாட்டி கொண்ட மாணவி எம்.வசந்தபிரியாவின் மரணம் ஒரு தற்கொலையே என்று மரண விசாரணை நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சாட்சியங்களின் அடிப்படையை வைத்து பார்க்கும்போது இம்மாணவியின் மரணம் தற்கொலை என உறுதிபடுத்தப்படுவதாக மரண விசாரணை அதிகாரி நோர்ஷலா ஹம்சா கூறினார்.'

சாட்சியங்களை வைத்து பார்க்கும்போது அம்மாணவி தூக்கிட்டு கொள்ளும்போது  அந்த அறை பூட்டப்பட்டிருந்தது. அந்த அறையில் அவரை தவிர வேறு யாரும் இல்லை, அந்த அறையில் வேறு எந்த பொருட்களும் உடைந்ததற்கான ஆதாரம் இல்லை என அவர் சொன்னார்.

தூக்கிலிட்டு கொண்டதால் கழுத்துப் பகுதியில் சிறு காயம் மட்டும் காணப்படுவதாகவும் குற்றவியல் சம்பவங்களுக்கான எவ்வித தடயமும் காணப்படவில்லை.

மருத்துவச் சான்றின்படி அம்மாணவியின் உடலின் உட்புற, வெளிப்புற பகுதிகலளில் காயங்கள் ஏதும் இல்லை என்பதால்  இந்நீதிமன்றம் இம்மரணத்தை ஒரு தற்கொலை என முடிவு செய்துள்ளதாக அவர் கூறினார்.

கடந்த ஜனவரி 24ஆம் தேதி ஆசிரியர் கைப்பேசி களவு போனது தொடர்பில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதால் மன உளைச்சலுக்கு ஆளான 2ஆம் படிவ மாணவியான வசந்தபிரியா (வயது 14) தூக்கிட்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.

7 நாட்கள் தீவிர சிகிச்சை பிரிவில் கண்காணிக்கப்பட்டு வந்த வசந்தபிரியா சிகிச்சை பலனின்றி பிப்ரவரி 1ஆம் தேதி மரணமடைந்தார்.

No comments:

Post a Comment