Saturday 22 September 2018

தேர்தல் ஆணையத் தலைவராக அஸார் ஹருண் நியமனம்



கோலாலம்பூர், செப்.22-
மூத்த வழக்கறிஞர் அஸார் ஹருண் தேர்தல் ஆணையத்தின் புதியத் தலைவராக  நியமிக்கப்பட்டுள்ளார்.

டத்தோஶ்ரீ முகமட் ஹஷிம் கடந்த ஜூலை மாதம் 1ஆம் தேதி பணி ஓய்வு பெற்றார். அவருக்குப் பதிலாக அஸார் ஹரூண் இந்தத் தலைவர் பதவிக்கு நியமித்துள்ளதாக அரசாங்க தலைமைச் செயலாளர் டத்தோஶ்ரீ இஸ்மாயில் பக்கார் அறிவித்தார்.

அரசியலமைப்பு 114ஆவது சட்டத்தின் முதலாம் பிரிவின்படி இவரை நியமித்துள்ளதாகவும் இதற்கு மாமன்னரின் ஒப்புதல் கிடைத்துவிட்டதாகும் அவர் தெரிவித்தார்.

மலாயா பல்கலைக்கழத்தில் சட்டத் துறையில் இளங்கலை பட்டம் பெற்ற இவர், லண்டனில் அமைந்துள்ள கிங்ஸ் பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில் முதுகலை பட்டம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.



















No comments:

Post a Comment