Friday 21 September 2018

நஜிப் மீது 21 குற்றச்சாட்டுகள் சுமத்தப்படவுள்ளன


கோலாலம்பூர்-
அதிகார துஷ்பிரயோகம், சட்டவிரோத பண பரிமாற்றம் ஆகியவை தொடர்பில் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் மீது 21 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

260 கோடி  வெள்ளி  நிதி விவகாரம் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் (எம்ஏசிசி) கைது செய்யப்பட்ட டத்தோஸ்ரீ நஜிப் நேற்று காலை ஜாலான் துன் ரசாக்கில் உள்ள குற்றவியல் விசாரணை துறைக்கு அழைத்து வரப்பட்டார்.

கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நிறுத்தப்படும் டத்தோஸ்ரீ நஜிப் மீது 21 குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும் என தேசிய போலீஸ்  படைத் தலைவர் டான்ஸ்ரீ நோர் ரஷிட் இப்ராஹிம் தெரிவித்தார்.

2001 சட்டவிரோத பண பரிமாற்றம், பயங்கரவாத நடவடிக்கைகளுக்கான நிதியளிப்பு தடுப்பு சட்டத்தின் கீழ் நஜிப் மீது 21 குற்றச்சாட்டுகள் சுமத்தப்படவுள்ளன.

தேசிய சட்டத்துறை தலைவர் அலுவலகத்தின் அனுமதி கிடைத்தவுடன்தான் அவர் கைது செய்யப்பட்டதாக நோர் ரஷிட் தெரிவித்தார்.

No comments:

Post a Comment