ரா.தங்கமணி
ஈப்போ-
கடந்த கால ஆட்சியின்போது முன்னெடுக்கப்பட்ட திட்டங்கள் மக்களுக்கு பயனுள்ளது என்றால் அதனை தொடர்வதில் பக்காத்தான் ஹராப்பானுக்கு எவ்வித தயக்கமும் இல்லை என மாநில மந்திரி பெசார் அஹ்மாட் ஃபைசால் அஸுமு தெரிவித்தார்.
கடந்த தேசிய முன்னணி அரசாங்கம் மாநில மக்களுக்காக பல திட்டங்களை முன்னெடுத்துள்ளது. அந்த திட்டங்களால் மக்கள் பயனடைந்துள்ளனர் எனும்போது அதனை தவிர்க்க முடியாது.
மக்களுக்கு பயனுள்ள திட்டங்களை ஆளும் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி ஒருபோதும் தடுத்து விடாது. அந்த திட்டங்கள் சிறப்பானது எனும் நிலையில் அரசியல் பாகுபாடு காட்டி அத்திட்டத்தை முடக்கும் சாத்தியம் கிடையாது என்ற அவர், ஆனால் அது குறித்து தீர ஆராயப்படும் என்றார்.
நேற்று நடைபெற்ற ஆட்சிக்குழு உறுப்பினர் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது அவர் இவ்வாறு கூறினார்.
தேமு ஆட்சியின்போது நடத்தப்பட்ட 'லங்காவி கலந்துரையாடல்' நிகழ்ச்சி பக்காத்தான் ஆட்சியில் தொடரப்படுமா? என கேள்வி கேட்டபோது அவர் இவ்வாறு சொன்னார்.
No comments:
Post a Comment