Sunday 13 May 2018

பேராவில் ஆட்சியமைக்கிறது பக்காத்தான் ஹராப்பான்



கோலகங்சார்-
இழுபறியில் நீடித்த பேரா மாநில ஆட்சியை பக்காத்தான் ஹராப்பான் கைப்பற்றியுள்ளது. 31 சட்டமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மையுடன் இந்த ஆட்சி அமையவுள்ளது என பேரா பக்காத்தான் ஹராப்பான் தலைவர் அஹ்மாட் ஃபைசாச் அஸுமு தெரிவித்தார்.

நடந்து முடிந்த 14ஆவது பொதுத் தேர்தலில் 29 சட்டமன்ற இடங்களை பக்காத்தான் ஹராப்பான் வென்ற நிலையில் 27 இடங்களை தேசிய முன்னணியும் 3 இடங்களை பாஸ் கட்சியும் கைப்பற்றியது.

இந்நிலையில் ஆட்சியமைக்க 30 இடங்களின் பெரும்பான்மையை நரூபியுங்கள் என பேரா சுல்தான் நஸ்ரின் ஷா இவ்விரு கூட்டணிக்கு இன்று பிற்பகல் 2.00 மணிவரை காலக்கெடு விதித்தார்.

இந்நிலையில் தங்களிடம் 31 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் ஆட்சியமைக்க உள்ளோம் என அவர் கூறினார்.

No comments:

Post a Comment