தூத்துக்குடி-
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என அப்பகுதி மக்கள் முன்னெடுத்த போராட்டத்தில் போலீசார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் , பலியானோரின் எண்ணிக்கை 12ஆக உயர்ந்துள்ளது.
போராட்டத்தின் 100-வது நாளான நேற்று ஆயிரக்கணக்கான மக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை நோக்கி ஊர்வலமாக சென்றனர்.
அவர்களை தடுத்து நிறுத்தும்போது போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்தது. போராட்டக்காரர்களை களையும் நோக்கில் போலீசார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
No comments:
Post a Comment