Friday 18 May 2018

கல்வி அமைச்சராகிறார் துன் மகாதீர்

கோலாலம்பூர்-
பிரதமராக பதவியேற்றப் பின்னர்  அதிரடியை நிகழ்த்தி வரும் துன் மகாதீர் முகம்மது தற்போது கல்வி அமைச்சராகவும் பொறுப்பேற்றுள்ளார்.

நாட்டின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் வகையில் கல்வி அமைச்சர் பொறுப்பை ஏற்றுக் கொள்வதாக அவர் சொன்னார்.

இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், 'நாட்டில் பலர் கல்வியறிவு அற்றவர்களாக இருப்பதால் அதனை மேம்படுத்தவும் கல்வி போதனை மேம்படுத்தும் வகையில் புதிய யுக்திகளை வகுக்க வேண்டும் என்பதால் இந்த அமைச்சை தாம் ஏற்றுக் கொள்வதாக' அவர் சொன்னார்.

அதோடு, துணைப் பிரதமர்  டத்தோஶ்ரீ வான் அஸிஸா மகளிர், குடும்ப, சமூக நல அமைச்சராக கூடுதல் பொறுப்பேற்பார்  என துன் மகாதீர் கூறினார்.

No comments:

Post a Comment