Thursday, 17 May 2018

கைது செய்யப்படுவாரா நஜிப்? - நகரும் பரபரப்பு நிமிடங்கள்


கோலாலம்பூர்-
முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் வீட்டில் போலீசார் சோதனை மேற்கொண்டுள்ள நிலையில் அவர் இன்று கைது செய்யப்படுகிறாரா? என்ற பரபரப்பு கூடியுள்ளது.

டத்தோஶ்ரீ நஜிப் வீட்டில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதை புக்கிட் அமான் வர்த்தக குற்றப்புலனாய்வு பிரிவு இயக்குனர்ர் டத்தோ அமார் சிங் உறுதிப்படுத்தியுள்ளார்.

1எம்டிபி விவகாரம் தொடர்பில் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் மீது குற்றச்சாட்டு சுமத்தப்படும் என பிரதமர் துன் மகாதீர் இதற்கு முன் கூறியிருந்த நிலையில், நேற்று இரவு 10.15 மணியளவில் 15க்கும் மேற்பட்ட போலீஸ் வாகனங்களும் லோரிகளும் குவிக்கப்பட்டன.

ஜாலான் லங்காக் டூத்தாவில் உள்ள நஜிப்பின் வீட்டின் முன்பு போலீஸ்காரர்கள் மட்டுமல்லாது ஊடகவியலாளர்களும் குவிந்து கிடக்கின்றனர்.
சோதனை நடவடிக்கை அடுத்து டத்தோஶ்ரீ நஜிப் கைது செய்யப்படுவாரா? இல்லையா? என்ற பரபரப்புடம் நிமிடங்கள் நகர்ந்து கொண்டிருக்கின்றன.

No comments:

Post a Comment