பெட்டாலிங் ஜெயா-
கால தாமதமாக வழங்கப்பட்ட அலவன்ஸ் தொகையால் பெரும் இன்னலுக்கு ஆளாக்கியுள்ள நிலையில் இன்னும் 2 மாதங்களுக்கான அலவன்ஸ் தொகை கிடைக்கப்பெறுமா? என்ற கேள்விக்குறியோடு எங்களது நாட்களை நகர்த்திக் கொண்டிருக்கிறோம் என பாலர்பள்ளியில் ஆசிரியர்கள் குறிப்பிட்டனர்.
கடந்த தேசிய முன்னணி ஆட்சியின்போது பிரதமர் துறையின் கீழ் இயங்கி வந்த 'செடிக்' அமைப்பின் மானியத்தோடு அலவன்ஸ் பெற்று குடும்ப, அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து வந்தோம்.
வீடியோ இணைப்பு:
வீடியோ இணைப்பு:
ஆனால் தற்போது நிகழ்ந்துள்ள ஆட்சி மாற்றத்தினால் எங்களது அலவன்ஸ் கேள்விகுறியாகியுள்ள நிலையில் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் சூழலை எதிர்கொண்டுள்ளோம் என பாலர் பள்ளி ஆசிரியர்களான பரமேஸ்வரி, ரேவதி, அமுதா, பாலர் பள்ளி இயக்குனர் ர.கணேசன், இயக்கத்தின் செயலைவை உறுப்பினர் பிரான்சிஸ் ஆகியோர் தங்களது வேதனையை வெளிபடுத்தினர்.
கல்வி போதனையின் வழி மாணவர்களுக்கு திறம்பட கல்வியை போதிக்க முனைகின்ற எங்களுக்கு வழங்கப்பட்டு வந்த அலவன்ஸ் தொகை நிறுத்தப்பட்டதால் குடும்பத்தின் தேவைகளுக்கும் சிறார்களின் உணவு, பயிற்சி புத்தகங்களுக்கு செலவிடும் நடவடிக்கை கேள்விக்குறியாகிறது.
வீடியோ இணைப்பு:
எங்களின் விவகாரத்தை அரசாங்கம் தீர ஆராய வேண்டும் எனவும் நிலுவையில் உள்ள பணம் ஆகியவை வழங்கப்படுவதற்கு அரசாங்கம் இணங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
No comments:
Post a Comment