Thursday, 24 May 2018

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவன் நான்; என்னை சந்திப்பதில் தடையேதுமில்லை- பேரா மந்திரி பெசார்


புனிதா சுகுமாறன்

ஈப்போ-
நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலின்போது ஏற்பட்ட அரசியல் சுனாமியில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி மிகப் பெரிய வெற்றியை பெற்று அரசாங்கத்தை கைப்பற்றியது.

கடந்த 60ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த தேசிய முன்னணியை மலேசிய மக்களின் மாற்றத்தினால் புதிய அரசாங்கம் அமைந்தது. அந்த வகையில், பேரா மாநிலத்திலுள்ள மக்களும் பக்காத்தான் ஹராப்பானுக்கு மிகப் பெரிய ஆதரவு வழங்கி வெற்றி வாசலை திறந்தனர்.

ஆகையால், "மக்களால் தேர்ந்தெடுக்கப்படன் நான்", என்னை வந்து சந்திப்பதில் மக்களுக்கு  எவ்வித தடையும் இல்லை என்று பேரா மாநில மந்திரி பெசார் அமாட் ஃபைசால் அஸுமு கூறினார்.

இம்மாநிலத்திலுள்ள மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்க்கவே நான் இந்த "நாற்காலியில்" அமர்ந்துள்ளேன். மக்கள் என்னை வந்து சந்திப்பதில் எவ்வித தயக்கமும் காட்டாமல் அவர்களின் பிரச்சினைகளை முன் வைக்கலாம். மக்களின் பிரச்சினைகளை கையாள்வதற்கு  நான் தயாராக உள்ளேன்.

மக்களின் ஆதரவின்றி இன்று இங்கு நான் இல்லை. மக்களின் பிரதிநிதியாக மாநில மந்திரி பெசாராக பதவியேற்ற நான், என் கடப்பாட்டிலிருந்து ஒருபோதும் தவறமாட்டேன் என்று இன்று நடைபெற்ற பேரா மாநில முதல் நாள் ஆட்சிக் குழு கூட்டத்தின்போது அவர் இவ்வாறு பேசினார்.







No comments:

Post a Comment