Wednesday 23 May 2018

நஜிப்புக்கு எதிராக மூன்று அமைச்சர்கள் குரல் கொடுத்தனர்- எம்ஏசிசி தலைமை ஆணையர்

புத்ராஜெயா-
1எம்டிபி விவகாரத்தில் முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கு எதிராக மூன்று அமைச்சர்கள் குரல் கொடுத்தனர் என மலேசிய லஞ்ச ஒழிப்பு ஆணையத்தின் (எம்ஏசிசி) தலைமை ஆணையர் டத்தோஶ்ரீ முகமட் சுக்ரி அப்துல் தெரிவித்தார்.

கடந்த 2015ஆம் ஆண்டில் 1எம்டிபி-க்கு 260 மில்லியன் வெள்ளி நன்கொடை, அதன் கிளை நிறுவனமான எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் நிறுவனத்திடமிருந்து 42 மில்லியன் வெள்ளியை டத்தோஶ்ரீ  நஜிப் தனது சொந்த வங்கி கணக்கில் செலுத்திக் கொண்டது தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

அப்போது நானும் எம்ஏசிசி முன்னாள் தலைமை ஆணையர் டான்ஶ்ரீ அபு காசிம் ஆகியோர் அப்போதைய அமைச்சர்களை சந்தித்து டத்தோஶ்ரீ நஜிப்புக்கு எதிராக குரல் கொடுக்குமாறு கேட்டுக் கொண்டோம்.

அப்போது மூன்று அமைச்சர்கள் மட்டுமே தைரியமாக குரல் கொடுத்தனர்.
முன்னாள் துணைப் பிரதமர் டான்ஶ்ரீ முஹிடின் யாசின், நகர்ப்புற, ஊராட்சி மேம்பாட்டு துறை முன்னாள் அமைச்சர் டத்தோஶ்ரீ முகமட் ஷாபி அப்டால், முன்னாள் இரண்டாவது நிதியமைச்சர் டத்தோஶ்ரீ உஸ்னி அனாட்ஸ்லா ஆகியோர் அந்த மூன்று அமைச்சர்கள ஆவர்.

பல அமைச்சர்களை சந்தித்து இவரை (நஜிப்) வெளியேற்றுமாறும் அதற்கு பதிலாக டத்தோஶ்ரீ ஸாயிட் ஹமிடி, டத்தோஶ்ரீ ஹிஷாமுடின் ஆகியோரை பிரதமராக கொண்டு வரலாம் எனவும் நாங்கள் பேசினோம்.

ஆனால் இந்த மூன்று அமைச்சர்கள் மட்டுமே தைரியமாக குரல் கொடுத்தனர், மற்ற அமைச்சர்கள் தைரியமில்லாமல்  குரலெழுப்பவில்லை  என புத்ராஜெயாவில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறினார்.

No comments:

Post a Comment