Monday 28 May 2018

தமிழ்ப்பள்ளிகளில் நுழைய மஇகாவுக்கு தடை விதிக்கப்படாது - அ.சிவநேசன்

ரா.தங்கமணி

சுங்கை சிப்புட்-
நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலில் மத்திய, மாநில அரசுகளை கைப்பற்றியுள்ள பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி, தமிழ்ப்பள்ளிகளில் மஇகாவினர் நுழைவதற்கு எவ்வித தடையும் விதிக்காது என்று பேரா மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவநேசன் கூறினார்.

கடந்த 2008ஆம் ஆண்டு முதல் பல சட்டமன்ற, நாடாளுமன்றத் தொகுதிகளே வென்ற பக்காத்தான் கூட்டணி உறுப்பினர்களுக்கு தமிழ்ப்பள்ளிகளில் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டது.

சுங்காய் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட எனக்கே அங்குள்ள பள்ளிகளில் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டது.

தற்போது பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில் மஇகா எதிர்க்கட்சியாக மாறியுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்ப்பள்ளிகளில் நுழைவதற்கு எங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை போன்று அவர்களுக்கு விதிக்கப்படாது.

தமிழ்ப்பள்ளிகளுக்கு அவர்கள் வழங்கும் சேவையை தடுக்க மாட்டோம். ஆனால் அங்கு அரசியல் செய்யப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அதேபோன்று ஆலயங்களிலும் அரசியல் செய்வது தவிர்க்கப்பட வேண்டும் என சுங்காய் சட்டமன்ற உறுப்பினருமான சிவநேசன் வலியுறுத்தினார்.


No comments:

Post a Comment