Monday 28 May 2018
எதிர்க்கட்சியாய் இனி சிறந்த சேவையை வழங்குவோம்- தினாளன் ராஜகோபாலு
புனிதா சுகுமாறன்
படங்கள்: ரா.தங்கமணி
ஈப்போ-
நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலில் ஆட்சியை இழந்து விட்ட தேசிய முன்னணியுடன் கைகோர்த்து இனி எதிர்க்கட்சியாய் திறம்பட செயலாற்றுவோம் என மஇகா இளைஞர் பிரிவின் துணைத் தலைவர் தினாளன் ராஜகோபாலு தெரிவித்தார்.
முன்பு ஆளும் கட்சியாய் இருந்த நாம் செய்யத் தவறிய சில விஷயங்களின் பின் விளைவுகளாலேயே இன்று மிகப் பெரிய தோல்வியை சந்தித்துள்ளோம். அந்த தவறுகளிலிருந்து பாடம் கற்றுக் கொண்டு இனி எதிர்க்கட்சியாய் திறம்பட செயலாற்ற நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.
முன்பு எதிர்க்கட்சியாக இருந்தவர்கள் செய்த வேலையை நாம் இப்போது செய்தாக வேண்டும். நம்மை நாடி வரும் மக்களின் பிரச்சினைகளுக்கு காது கொடுத்து கேட்டு அவற்றுக்கு தீர்வு காணும் வகையில் தற்போது சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களின் கவனத்திற்குக் கொண்டு செல்ல ஆவன செய்ய வேண்டும்.
தோல்வியை கண்டு துவண்டு விடாமல் அடுத்து வரும் 5 ஆண்டுகளுக்கு சிறந்த எதிர்க்கட்சியாக இருந்து மக்களுக்கு சேவை வழங்கும் அதே வேளையில் மஇகாவை மீண்டும் புதிய கட்டமைப்புடன் ஏற்றம் பெறச் செய்ய வேண்டும் என நேற்று இங்கு பேரா மாநில மஇகா இளைஞர் பிரிவினருடன் நடத்தப்பட்ட சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் தினாளன் ராஜகோபாலு இவ்வாறு கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment