Saturday 19 May 2018

குற்றம் இழைத்தது 'ரோஸ்மா'வாக இருந்தாலும் தப்ப முடியாது - துன் மகாதீர்


பெட்டாலிங் ஜெயா-
பல்வேறு குற்றங்கள் தொடர்பில் அதிகாரிகள் முன்னெடுக்கும் விசாரணைகளில் தேசிய முன்னணியின் தலைவர்கள் யாராக இருந்தாலும் அது முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப்பின் துணைவியார் டத்தின்ஶ்ரீ ரோஸ்மாகவே இருந்தாலும் தண்டனையிலிருந்து தப்ப முடியாது என பிரதமர் துன் மகாதீர் கூறினார்.

இந்த விசாரணையை போலீஸ் மட்டுமின்றி பல்வேறு அரசு இலாகாக்களும் மேற்கொண்டு வருகின்றன. அண்மையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கை தொடர்பில் போலீஸ் போதிய விளக்கங்களை அளித்துள்ளது. எனக்கு கூட தகவல் தெரிவிக்கப்படவில்லை. இது  அவர்களின் கடமையாகும்.
யாராக இருந்தாலும் (ரோஸ்மா உட்பட) அவர்கள் மீதான அனைத்து குற்றச்சாடுகளையும் விசாரிக்க முனைகிறோம். குற்றங்கள் இருப்பின் நாம் அவர்களை தண்டனைக்கு உட்படுத்தலாம்.

இந்த விசாரணையில் பல்வேறு அரசு நிறுவனங்கள், அமைச்சு, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி), போலீஸ், தலைமை நீதிபதி ஆகியோர் ஈடுபட்டுள்ளன என அவர் சொன்னார்.

அண்மையில் முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக்கின் வீட்டில் போலீசார் அதிரடிச் சோதனைகளை மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment